Friday, February 28, 2020

Indian Muslim Orthodoxy's Response To Demands Of Modernity நவீனத்துவத்தின் கோரிக்கைகளுக்கு இந்திய முஸ்லீம் மரபுவழியினரின் பதில்: பன்மை சமூகங்களில் முஸ்லிம்கள் பிற மத சமூகங்களுடன் இணைந்து வாழ முடியுமா?




By Sultan Shahin, Founder-Editor, New Age Islam

நவீனத்துவத்தின் கோரிக்கைகளுக்கு இந்திய முஸ்லீம் மரபுவழியினரின் பதில்: பன்மை சமூகங்களில் முஸ்லிம்கள் பிற மத சமூகங்களுடன் இணைந்து வாழ முடியுமா?
சுல்தான் ஷாஹின்நிறுவனர்-ஆசிரியர்நியூ ஏஜ் இஸ்லாம்
16 நவம்பர் 2015
எந்த வகையான சீர்திருத்தத்தை நவீனத்துவம் மரபுவழியினரிடம் கோருகிறது? முக்கியமாக,இஸ்லாமியர்களை மேலாதிக்கத்தின் நயவஞ்சக வலையில் இருந்து வெளியே வருமாறும்,உலகின் ஒரே மதமாக மாற்றும் கனவு, ஒரு இஸ்லாமிய கலீபா மூலம் உலகை ஆளும் கனவு, இவற்றிலிருந்துது வெளியே வருமாறு அது முஸ்லிம்களைக் கேட்கிறது.முஸ்லிம்கள் மற்ற மத சமூகங்களுடன் இணைந்து வாழ வேண்டும், பிற மதங்களையும் கலாச்சாரங்களையும் மதிக்க வேண்டும், அனைத்து குடிமக்களுக்கும் சம உரிமைகளை வழங்க வேண்டும், அனைவருக்கும் பாலின சமத்துவத்தையும் நீதியையும் கடைபிடிக்க வேண்டும், சுருக்கமாக,ஐ.நா மனித உரிமை சாசனம் போன்றவற்றைப் பின்பற்றவும் என்று கோரிக்கை விடுக்கிறது. இந்த குறிக்கோள்கள் ஒவ்வொன்றும் இஸ்லாத்தின் அஸ்திவார வேதமான புனித குர்ஆனால் ஆதரிக்கப்படுகின்றன, குர்ஆனிய கட்டளைப்படி முஸ்லிம்களாகிய நாம் தான்  குர்ஆனிய வசனங்களின் சிறந்த பொருளைக் கண்டுபிடித்து அதன்வழி செல்லவேண்டும். (அத்தியாயம் 39: வசனம் 55 இல் அறிவுறுத்தப்பட்டுள்ளது , 39: 18; 39: 55; 38: 29; 2: 121; 47: 24, போன்றவை).குர்ஆனிய வசனங்களின் "போதுமான விளக்கத்தை" கண்டுபிடிக்க வேண்டும் என்று சமீபத்தில் புனித போப் பிரான்சிஸிஸ் வழங்கியிருக்கும் அறிவுரையைப் பின்பற்றுவதும் நல்லது.எனவே குர்ஆன் மற்றும் போப் பிரான்சிஸ் சொல்வது  முஸ்லிம்கள் வசனங்களை உண்மையில் பின்பற்றக்கூடாது, ஆனால் அதை மிகச் சிறந்த அல்லது போதுமான வகையில் விளக்க முற்பட வேண்டும் என்பதுதான்.
வரலாற்று ரீதியாக, சிந்தனையாளர்கள், தத்துவவாதிகள், ஆன்மீகவாதிகள், இறையியலாளர்கள், குர்ஆன் விளக்கவுரையாளர்கள் மற்றும் ஹதீஸ் ஆய்வுகளில் நிபுணர்கள் என்று ஒரு விண்மீன் மண்டலத்தையே இஸ்லாம் உருவாக்கியுள்ளது.ஆட்சியாளர்கள் சகிப்புத்தன்மையற்ற கொடுங்கோலர்களாக இருந்தாலும் சரி, அல்லது பரந்த மனப்பான்மை கொண்ட தாராளவாதிகளாக இருந்தாலும் சரி, இஸ்லாமிய மரபில் கலாம் எனப்படும் விவாதங்களும் கலந்தாய்வுகளும் விதிவிலக்காக இல்லாமல் நெறிமுறையாகவே இருந்து வந்தன. பகுத்தறிவாளர் முஅ’தசிலா கூட 8 - 10 ஆம் நூற்றாண்டுகளில் ஒரு காலத்திற்கு செழித்து வளர்ந்தார்.பலசிறந்தஇஸ்லாமியசிந்தனையாளர்கள்பலஆண்டுகள்சிறையில்கழித்தனர், தூக்குமேடைக்குச்சென்றனர், ஆனால்ஒருபோதும்சுதந்திரமானசிந்தனைமற்றும்கருத்துகளைவெளிப்படுத்தும்உரிமையைப்பயன்படுத்துவதில்இருந்துபின்வாங்கவில்லை.
இறையியல் பிரச்சினைகள் குறித்த விவாதங்களையும் கலந்தாய்வுகளையும் தடைசெய்வது சலாபி-வஹாபி இஸ்லாம் மட்டுமே.மேற்கில் "பியூரிட்டன்" என்று அழைக்கப்படும் இஸ்லாத்தின் இந்த இணக்கமற்ற, வறட்சியான, பாலைவன வடிவுருவைப் பரப்புவதற்கு சவூதி அரேபியா பல்லாயிரக்கணக்கான பில்லியன் டாலர்களை செலவிட்டு வருகிறது.இஸ்லாமியம்,  இஸ்லாத்தை பலத்தால் பரப்ப வேண்டும் என்று சொல்லப்படும் இந்த விளக்கத்திலிருந்து மாறுபடுகிறது.
ஜிஹாதிசம்என்பது,உண்மையில், ஆயுதங்கள்மற்றும்பயங்கரவாதத்தின்சக்தியுடன்அதைசெயல்படுத்தமுற்படும்மற்றொருபகுதி.
சலாபிசத்தின்பரவலானதாக்கத்தின்கீழ், சமகாலஇந்தியஇஸ்லாம்ஒருமோசமானபடத்தைமுன்வைக்கிறது. கவலைமிக்க இன்றியமையாத பிரச்சினைகள் குறித்த உரையாடலில் கிட்டத்தட்ட முழுமையான தேக்கம் உள்ளது.உதாரணமாக, இஸ்லாமிய பயங்கரவாதத்தின் பின்னணியில் மதம் அல்லது இறையியல் என்று குறிப்பிட்டாலே அதன் மீது முகம் சுளிக்க வைக்கிறது. உலகெங்கிலும் உள்ள முஸ்லீம் சமூகங்கள், இஸ்லாமிய ராணுவம், ஜிஹாதி, மனித வெடிகுண்டு என்று தூண்டப்படும் குழுக்களுக்கு எங்கெங்கு  தேவைப்படுகிறதோ அந்த இடங்களில் உற்பத்தி செய்யும் அதே சமயம் தற்கொலை இஸ்லாத்தின் மிகக் கொடூரமான குற்றங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.ஆனால் இந்திய உலமாக்கள் கிட்டத்தட்ட முற்றிலும் மௌனமாக இருக்கிறார்கள்.13 மே 2015 அன்று சுயமாக அறிவித்துக் கொண்ட கலீஃபா அல்-பாக்தாதி "இஸ்லாம் ஒருபோதும் சமாதான மதமாக இருந்ததில்லை, ஒரு நாள் கூட இல்லை, அது எப்போதும் போரின் மதமாக இருந்து வருகிறது" என்று கூறியபோது இந்த மௌனம் செவிடன் காதில் ஊதியதாகியது.இந்தியாவில் ஒரு ஆலிம் (அறிஞர்) கூட அதை எதிர்க்கவில்லை அல்லது கண்டிக்கவில்லை.
இஸ்லாமிய பெரும்பான்மை நாடுகளில், பதினொரு நாடுகளில் நடத்தப்பட்ட 2013 PEW கருத்துக் கணிப்பு, இஸ்லாத்தை பாதுகாப்பதற்காகப் பொதுமக்களுக்கு எதிரான தற்கொலை மனிதவெடிகுண்டு ஆதரவு சமீபத்திய ஆண்டுகளில் குறைந்துவிட்டது என்பதைக் காட்டுகிறது. இருப்பினும், போராளிகள் அல்லாதவர்களுக்கு எதிரான இந்த வன்முறை "பெரும்பாலும்" அல்லது "சில நேரங்களில்" நியாயமானது என்று இன்னும் நினைக்கும் மக்களின் எண்ணிக்கை மிகவும் கவலையளிக்கிறது:
எகிப்து (25 சதவீதம்), இந்தோனேசியா (6 சதவீதம்), ஜோர்டான் (12 சதவீதம்), லெபனான் (33 சதவீதம்), மலேசியா (27 சதவீதம்), நைஜீரியா (8 சதவீதம்), பாகிஸ்தான் (3 சதவீதம்), பாலஸ்தீனபிரதேசங்கள் (62 சதவீதம்), செனகல் (18 சதவீதம்), துனிசியா (12 சதவீதம்), துருக்கி (16 சதவீதம்).
உலகளவில் 1.6 பில்லியன்முஸ்லிம்கள்உள்ளனர். மதநம்பிக்கையைப்பாதுகாப்பதற்காகபொதுமக்கள்மீதானதற்கொலைமனிதகுண்டுவெடிப்பை 10 சதவீதம்பேர்ஆதரித்தாலும்கூட, அது 160 மில்லியன்பயங்கரவாதஆதரவாளர்கள்ஆகிறது. (www.pewglobal.org)
இந்திய முஸ்லீம் மதகுருக்கள் அல்லது அறிவுஜீவிகள் கூட இதுபோன்ற ஆய்வுகளினால் கவலைப்படுவதாகத் தெரியவில்லை.நமது செயல்நேரிமுறை சிந்தனையாளர்களால் கூட, இந்திய முஸ்லிம்கள் யாரும் அல்கொய்தாவில் சேரவில்லைமற்றும்சிலர் ஐஎஸ்ஐஎஸ்ஸிற்காகப் போராடச் சென்றிருக்கிறார்கள், எனவே இந்திய இஸ்லாம் ஜிஹாதிஸத்தின் கவர்ச்சிக்கு ஆளாகவில்லை என்று முடிவு செய்யலாம் என்பதான வாதம் செய்யப்படுகிறது. ஆனால் ஐஎஸ்ஐஎஸ்ஸில் சேருவது, தீவிரவாதத்தின் எல்லைக்கு அளவுகோலாக முடியாது. ஏதேனும் இருந்தால், இந்திய முஸ்லீம் சமூகம் அண்டை நாடுகளான பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷைக் காட்டிலும் பழமைவாத அல்லது அடிப்படைவாத சமூகமாகிறது.
1947 இல் இந்திய துணைக் கண்டம் பிரிக்கப்படுவதற்கு முன்னர், இந்திய முஸ்லீம் சமூகம் ஆங்கிலேயர்களால் அறிவிக்கப்பட்டஒரு நேர்மையற்ற முஸ்லீம் தனிப்பட்ட சட்டத்தைக் கொண்டிருந்தது, பிரிவிற்கு பதின்மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு,  இந்த ஆங்கிலோ-முகமதிய சட்டங்களை, அவற்றை மேலும் பாலின சமத்துவம் உள்ளதாக ஏற்படுத்த பாகிஸ்தான் சீர்திருத்தியது.1961 இல் ஜெனரல் அய்யூப் கான் அறிவித்த இந்த சீர்திருத்தங்கள் பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷில் அரை நூற்றாண்டு காலமாக அனைத்து சிந்தனைப் பள்ளிகளுக்கும் ஏற்றுக்கொள்ளத்தக்க வகையில் இது செயல்பட்டு வருகின்றது.ஆனால்முஸ்லீம்அறிவுஜீவிகள்மௌனமாகஆதரிக்கும்நமதுஅடிப்படைவாதஉலமாக்களின்உறுதியானஎதிர்ப்பின்காரணமாகஇந்தியாவின்முஸ்லீம்தனிப்பட்டசட்டத்தில்இதேபோன்றமாற்றங்களைக்கொண்டுவருவதற்கானதைரியம்இந்தியாவில்எந்தஅரசாங்கத்திற்கும்இல்லை.உண்மையில், அப்படியே இருந்தாலும்இந்தச் சட்டங்கள் மிகவும் இன்னும் கடுமையானதாகவும், முறைகேடாகவும் செய்யப்பட்டுள்ளன.
இந்தியாவில் 92.1 சதவிகிதமுஸ்லீம்பெண்கள், மூன்றுதலாக்என்றும்அறியப்படும்உடனடிவாய்வழிவிவாகரத்துக்குமுழுத்தடையைவிரும்புகிறார்கள்என்றுசமீபத்தியஆய்வுசுட்டிக்காட்டுகிறது, ஆனால் நமது அரசாங்கங்களால் அதிகபட்சமாக இதைக்கூடச் செய்ய முடியவில்லை, அதே நேரத்தில் பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் சட்டங்கள், விவாகரத்து நீதிமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்ட பின்னரும், திருமணங்களும் விவாகரத்துகளும் பதிவு செய்யப்பட்டு, இரண்டாவது அல்லது அதன் பின்னரான திருமணங்களுக்கு நீதிமன்றத்தின் அனுமதி பெற்ற பின்னரே போன்றவை செல்லுபடியாகும் என்பதை உறுதிப்படுத்துகின்றன. இஸ்லாம் கருணையான மதம் என்ற அடிப்படையில் நம் நீதிமன்றங்கள் தலையிட்டு இஸ்லாமியப் பெண்களுக்கு நீதி வழங்க முயன்றன, ஆனால், நமது அறிஞர்கள் சுயமாக அறிவித்துக் கொண்ட கலீஃபா பாக்தாதி, இஸ்லாம் போர் மற்றும் சண்டையின் மதம் என்று சொல்லும் போது மௌனமாக இருந்து இஸ்லாம் ஒரு சமாதான மதம் என்ற கருத்தை நிராகரிப்பதைப் போலவே, இந்தக் கருத்தையும் நிராகரிக்கின்றனர்.
சில ஃபத்வாக்கள் எப்போதாவது இஸ்லாம் அமைதியான ஒரு மதம் என்று பொதுவான ஒரு கூற்றை முன்வைக்கின்றன, அது, நிச்சயமாகவே, அமைதியான மதம்தான். ஆனால், தீவிரவாதம்தொடர்வதற்குஅடிப்படையாகஇருக்கும்வன்முறை, மேலாதிக்கம், பிரத்தியேகவாதம் மற்றும் இனவெறி ஆகியவற்றினான இறையியலுக்கு எந்தவொரு மறுப்பும் இல்லாத நிலையில் உலேமாவின் உரிமைக் கோரிக்கைக் கூற்றுமுற்றிலும் சந்தேகத்திற்குரியது மற்றும் பாசாங்குத்தனமானது. முன்னெப்போதும் இல்லாத சவாலை நாடு இன்று எதிர்கொள்வதில் ஏதேனும் ஆச்சரியம் உள்ளதா. முஸ்லிம் இளைஞர்களிடையே தீவிரவாதம் நாள்க்கு நாள் ஆழமடைந்து வருகிறது.உண்மையான, உண்மையான, தூய்மையான இஸ்லாம் என்று அவர்கள் அழைக்கும் வஹாபி-சலாபி-அஹ்ல்-இ-ஹதீசி பிரச்சாரத்தின் கடுமையான தாக்கத்தை எதிர்நோக்கும் பல முஸ்லிம்கள், குறிப்பாக படித்த இளைஞர்கள் கவர்ச்சிக்குப் பலியாகின்றார்கள்.நூற்றுக்கணக்கானசலாபி-ஜிஹாதிவலைத்தளங்கள், வலைப்பதிவுகள், தொலைக்காட்சிசேனல்கள், செய்தித்தாள்கள், பத்திரிகைகள்போன்றவைஇஸ்லாத்தின்தீவிரவாதக்கருத்துவிளக்கத்தைஊக்குவிக்கும்அதேநேரத்தில், இந்த சித்தாந்தத்தைத் தொடர்ந்து, முறைதவறாமல் மறுத்து வரும் நியூ ஏஜ் இஸ்லாமைத் தவிர வேறு எந்தவொரு எதிர்கருத்தும் இல்லை.
முஸ்லீம் இளைஞர்களை ஈர்ப்பதில் ஜிஹாதி சித்தாந்தத்தின் வெற்றிக்கான காரணம் எளிது.நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக, முஸ்லீம் இறையியலாளர்கள் இஸ்லாமிய வரம்பை விரிவுபடுத்துவதற்காக இனவெறி மற்றும் வன்முறைக்கு ஒத்திசைவான இறையியலை உருவாக்குவதில் ஈடுபட்டுள்ளனர்.இஸ்லாத்தின் மரபுசார்ந்த ஆன்மீகவழிகாட்டிகளான இமாம் கசாலி, இப்னு-தைமியா, ஷேக் சர்ஹாண்டி, அப்துல் வஹாப் மற்றும் ஷா வாலி அல்லாஹ் முதல் 20 ஆம் நூற்றாண்டின் இறையியலாளர்களான சையத் குதுப், ஹசன் அல்-பன்னா மற்றும் மௌலானா மௌதூதி போன்றவர்கள் வரை, இஸ்லாம் உலகை வெல்ல வேண்டும் எனும் பார்வையை ஊக்குவிக்கும் ஒரு இறையியலை உருவாக்கியுள்ளனர். மன்சூர் அல்-ஹல்லாஜ் மற்றும் இப்னு-இ-அரபி போன்ற உண்மையான சூஃபிகள் மிகவும் மாறுபட்ட பார்வையைக் கொண்டிருந்தனர், மற்றும் இஸ்லாத்தை வீடுபேறு அடையிம் ஆன்மீக பாதையாகப் பார்த்தார்கள்.ஆனால், அவர்களின் காலங்களில், அமைதி மற்றும் பன்மைத்துவத்தின் ஒத்திசைவான இறையியலை உருவாக்க வேண்டிய அவசியத்தை சூஃபிகள் உணரவில்லை.இறையியலில் ஈடுபட்ட சூஃபிகள் இஸ்லாத்தை மரபுசார் கொள்கை  ஏற்றுக்கொள்ளக்கூடியதாகவும், மரியாதைக்குரியதாகவும் மாற்றுவதில் கவனம் செலுத்தினார்கள்.உதாரணமாக, மிகப் பெரிய சூஃபி இறையியலாளர் இமாம் கசாலி (மரணம்: டிசம்பர் 19, 1111), முஸ்லிம்கள் வருடத்திற்கு ஒரு முறையாவது ஜிஹாத்துக்கு செல்ல வேண்டும் என்று கூறினார்.
அவர்இமாம்ஷாபியின்சட்டமரபிலிருந்துமேற்கோள்காட்டிகோடிட்டுக்காட்டினார்.முகமது அப்துல் வஹாபின் பதினெட்டாம் நூற்றாண்டின் சலாபி இயக்கத்தின் பின்னணியில் உத்வேகம் அளித்த, இறையியலில் ஈடுபட்ட மற்றொரு சூஃபி, இமாம் இப்னு-தைமியா (மரணம்: செப்டம்பர் 26, 1328), உண்மையில் நவீன வன்முறை தீவிரவாதத்தின் அசல் நிறுவனர் ஆனார்.
இதன் விளைவு என்னவென்றால், பல நூற்றாண்டுகளாக உருவான வன்முறையின் ஒரு இறையியல், பல்லாயிரக்கணக்கான பில்லியன் டாலர்களின் முதலீட்டுடன் அனைத்து தாக்கங்களுடனும் பரவி வருகின்ற நிலையில்,அதைஎதிர்க்கும்வகையில்அமைதி மற்றும் பன்மைத்துவத்திற்கு இணையான, ஒத்திசைவானவிரிவான, இறையியல் இல்லை என்பதை உறுதி செய்கிறது.ஏனென்றால், மிதமான இறையியலாளர்கள் என்று அழைக்கப்படுபவர்களும், யதார்த்தத்தில், அதே அடிப்படை நம்பிக்கைகளால் உறுதிமொழி ஏற்கிறார்கள்.உதாரணமாக, குர்ஆனின் போர்க்குணமிக்கவை மற்றும் இனவெறியுடையவை என்று தோன்றும் சூழல்சார்ந்த வசனங்களும், மற்றும் நபிகள் மறைந்த பிறகு நூறு ஆண்டுகளாக சேகரிக்கப்பட்ட  அவரது காலத்தில் தொடுக்கப்பட்ட போர்களைப் பற்றிய ஹதீஸின் சில விவரணங்களும் வன்முறை இறையியலின் முக்கிய அடிப்படையாகும். ஆனால்குர்ஆனின்இந்தபோர்க்குணமிக்க, சூழல்வசனங்களும்ஹதீஸின்விவரிப்புகளும்இன்றுமுஸ்லிம்களுக்குப்பொருந்தாதுஎன்பதைத்தெளிவானவகையில்சொல்லஎந்தஒருவல்லுநரும்தயாராகஇல்லை.உண்மையில், சூராவின் 5 வது வசனத்தில் 3 ல் இஸ்லாத்தின் மதம் நிறைவடைந்தது என்று கடவுள் அறிவித்து 120 ஆண்டுகளுக்குப் பிறகு ஷரியா முதலில் நெறிமுறைப்படுத்தப்பட்டது என்றாலும் அவர்கள் அனைவரும் ஷரியாவின் தெய்வீகத்தினால் கூட சத்தியம் செய்கிறார்கள்.
ஒரு உறுதியான உதாரணம் தருகிறேன்.இந்தியஉலமாக்களில், மிதமான, அமைதியானஇஸ்லாத்தின்மிகமுக்கியமானபிரச்சாரகர்மௌலானாவாஹிதுதீன்கான்ஆவார்.இஸ்லாமியவலைத்தளமானநியூஏஜ்இஸ்லாமின்கருத்துரையாளர்ஒருவர்சுட்டிக்காட்டுவதுபோல, அவரதுபுத்தகமான “இஸ்லாம்-க்ரியேட்டர்ஆஃப் த மாடேர்ன்வேர்ல்ட்,” ல்அவர்சொல்வதாவது (பக். 17-18ல்), ““அவர் (நபிகள் நாயகம்) ஒரு டா’ய் (சமயபரப்பாளர்) மற்றும் ம’ஹி (ஒழிப்பவர்) ஆகவும் இருக்க வேண்டும் என்பது கடவுளின் ஆணை.மூடநம்பிக்கைகள் பொய்யை அடிப்படையாகக் கொண்டவை என்பதை உலகுக்கு அறிவிப்பதோடு, தேவை ஏற்பட்டால், அந்த முறைகளை முழுவதுமாக ஒழிப்பதற்குஇராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்என்பதும் கடவுளால் அவருக்கு இடப்பட்ட பணி.அதன் பின்அவர் மேலும் தொடர்ந்து புனித குர்ஆனின் ஒரு வசனத்துடன் தனது பார்வைக்கு முட்டுக் கொடுப்பதென்பது எனது பார்வையில் எந்த வகையிலும் அவரது முடிவை ஆதரிப்பதாகத் தெரியவில்லை. பின்னர்அவர்,வெளிப்பாட்டுக்குஒத்ததாககருதும்ஒருஹதீஸைமேற்கோள்காட்டுகிறார், அவர்கூறுகிறார்: "குறிப்பாகஒருஹதீஸ்அதன்சொற்களில்மிகவும்நேரடியானது, ‘அழிப்பவனாகியஎன்மூலம்கடவுள்சமயக்கோட்பாடுகளைநம்பாதவர்களைமுற்றிலும்ஒழிப்பார்.’இவ்வாறு தீர்க்கதரிசி ஒரு டா’ய் மட்டுமல்ல, ஒரு ம’ஹியும் கூட. அவர் விசுவாசத்திற்கு அழைப்பு விடுப்பவராக இருந்தார், ஆனால் அவர் தனது அழைப்புக்குப் பதிலளிக்க மக்களைக் கட்டாயப்படுத்த வேண்டியிருந்தது.மனிதர்களைத்தவிரகடவுளின்தேவதூதர்களும்அவருடையபணியைநிறைவேற்றஅவருக்குஉதவுவார்கள்என்றுகுர்ஆன்தெளிவாகக்கூறுகிறது.”
அமைதி மற்றும் பன்மைத்துவத்தை கட்டியெழுப்புவதில் ஒரு மிதமான இந்திய முஸ்லீம் மதகுரு மேற்கொண்ட அயராத முயற்சிகளுக்கு அவர் நியாயமாக அங்கீகாரம் பெறும் நிலை இருந்தால்,
அந்த தவறான முறைமை இன்னும் இருப்பதால், நபிகள் நாயகத்தின் முடிக்கப்படாத பணியைத் தொடர்வதும் மற்றும் அவர்கள்நம்புவதுமட்டுமேசரியானவழிமுறைகள்என்பதைச்செயல்படுத்தஇராணுவ வழிகளைப் பயன்படுத்துவதும் முஸ்லிம் உம்மாவின் கடமையாகும் என்று ஜிகாதிகள் சொல்வதற்கு அவர்களை எது தடுக்கிறது.கடவுளின் தூதர்களும் தங்களுடன் இருப்பதாக அவர்கள் ஏன் கூறக்கூடாது,மூடநம்பிக்கை, உருவ வழிபாடு, நம்பிக்கையின்மை ஆகியவற்றை ஒழிக்கும் நபியின் முடிக்கப்படாத பணியை மட்டுமே அவர்கள் முன்னெடுத்துச் செல்கிறார்கள் என்பதால்,
கடவுளின்தூதர்களும்,நபியுடன்இருந்ததைப்போலவே,அவர்களின்காரணத்தையும்ஆதரித்துஅவர்களுடன்இருக்கிறார்கள்என்றுஅவர்கள் ஏன் உரிமை கோரக்கூடாது? இது குர்ஆனின் தவறான விளக்கங்கள் மற்றும் ஒருங்கிணைந்த அஹதீத் மீதான தவறான நம்பிக்கை ஆகியவை இஸ்லாமிய வரலாறு முழுவதும் நியாயப்படுத்தப்பட்டுள்ளன,நிர்ப்பந்தம் மற்றும் வற்புறுத்தலின்அத்தியாயங்கள்,வன்முறைக்குவழிவகுக்கிறது, ரிடா (விசுவாசதுரோகம்) போர்களில்தொடங்கி, நபி (ஸல்) அவர்களின் மறைவுக்குப் பிறகு,முதல்கலீபாஹஸ்ரத்அபுபக்கர் (r.a) தலைமையில்,தலிபான்என்றுஅழைக்கப்படும்தியோபந்திமதரஸாதயாரிப்புகள், ஒசாமா பின்லேடனின் அல்-கொய்தாவால் ஏற்பட்ட இன்றைய வன்முறை மற்றும் கலவரங்களும்,வஹாபி-சலாபிபோகோஹராம்மற்றும்சுயமாகஅறிவிக்கப்பட்டகலீஃபாஅபுபக்கர்அல்-பாக்தாதியின்தலைமையில்இஸ்லாமியஅரசுஎன்றுஅழைப்படுபவைபோன்றவை.
உலகளாவிய முஸ்லீம் சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் மிதமான முஸ்லீம் அறிஞர்களான உலமாக்களின் பதில் வேறுபட்டதல்ல.ஆகஸ்ட் 2015 இல் உலகெங்கிலும் இருந்து பெரும்பாலான சிந்தனைப் பள்ளிகளைச் சேர்ந்த 120 உலெமாக்கள், ‘இஸ்லாமிய அரசின்’ சுயமாக அறிவிக்கப்பட்ட கலீஃபா அல்-பாக்தாதிக்கு ஒரு திறந்த கடிதத்தை அனுப்பினார்கள். 14, 000 க்கும் மேற்பட்ட சொற்களில் எழுதப்பட்ட இது ஒரு மதிப்புமிக்க ஆவணம்.சுய பாணியில் ஆளும் கலீஃபா பாக்தாதியின் ஆட்சியில் என்ன தவறு இருக்கிறது என்பதை இது காட்டுகிறது.ஆனால், மிக முக்கியமாக, தற்போதைய கட்டத்தில் மிதமான இஸ்லாத்தின் தவறு என்ன என்பதையும் இது காட்டுகிறது;இந்த மறுப்பு ஏன் செயல்படாது, இதுபோன்ற பிற மறுப்புகள் ஏன் செயல்படாது;மற்றும்ஏன் நம் குழந்தைகள் ஐஎஸ்ஐஎஸ் மற்றும் பிற பயங்கரவாத மையங்களுக்கு ஓடிச் செல்கிறார்கள்.உண்மையில், வரிகளுக்கு இடையிலான அர்த்தத்தைப் படியுங்கள், இந்த மிதமான ஃபத்வா, மிதமான இஸ்லாம் நிற்க எந்த இடத்தையும் விடாது. ஒரு இடத்தில் அது கூறுகிறது:
"... குர்ஆனில்உள்ளஅனைத்தும்உண்மை, நிலைநிறுத்தப்பட்டஹதீஸில்உள்ளஅனைத்தும்தெய்வீகமாகஅகத்தூண்டல்பெற்றவை."
பயங்கரவாதசித்தாந்தவாதிகள்தங்கள்மாணவர்களிடம்சொல்வதுசரியானதுஎன்பதற்கானமிதமானஉலமாவின்உறுதிப்படுத்தல்இது.இது துல்லியமாக ஜிஹாதி வாதம்.குர்ஆனுக்கும் ஹதீஸுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை;இரண்டுமேதெய்வீகமாகஅகத்தூண்டல்பெற்றவை. அனைத்தும்எல்லா காலத்திலும் மாறாத, உலகளாவிய, நித்திய வழிகாட்டுதலாக இருப்பவை.இதேபோல் வேறு பல விஷயங்களில் உலகெங்கிலும் உள்ள மிதமான உலமாக்கள் பயங்கரவாத சித்தாந்தவாதிகளுடன் தங்கள் கருத்துகள் பொருந்தக்கூடிய தன்மையைக் காட்டுகிறார்கள்.
அதே நூலிழைதான் 14,000 சொல்-ஃபத்வா வழியாக இயங்குகிறது.நன்குஅறியப்பட்டகுர்ஆனியவசனம் (லாஇக்ராஹாஃபிட்தீன்: கூடமிதமானஃபத்வாகேள்விக்குள்ளாக்குகிறது:
மதத்தில்எந்தநிர்ப்பந்தமும்இல்லை) ரத்துசெய்யப்பட்டுள்ளது.மக்காவில் வெளிப்படுத்தப்பட்ட அமைதியான மெக்கன் வசனங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன என்ற பயங்கரவாத சித்தாந்தவாதிகளின் அடிப்படை முன்மாதிரியை அது ஏற்றுக்கொள்கிறது, மற்றும் யுத்தம் தொடர்பான போர்க்குணமிக்க வசனங்களே இப்போது மேலோங்க வேண்டும்.
திறந்தகடிதத்தில்உள்ள 16 வதுகருத்து. "ஹுதுத்தண்டனைகள் (ஷரியாவில்நெறிமுறைப்படுத்தப்பட்டவை) குர்ஆன்மற்றும்ஹதீஸில்நிர்ணயிக்கப்பட்டுள்ளன, மற்றும்அவைஇஸ்லாமியசட்டத்தில்கேள்விக்கிடமின்றிகடமைப்பட்டவை"என்பதைமிதமானஉலமாக்கள்ஏற்றுக்கொள்கிறார்கள்.பாக்தாதிபழங்குடியினரின்அடிப்படைமுன்மாதிரியைஏற்றுக்கொண்டபின்னர், இஸ்லாமியஅரசுஎன்றுஅழைக்கப்படுபவற்றில்அதன்கொடூரமானசெயல்பாட்டைவிமர்சிக்கிறது.7 ஆம் நூற்றாண்டின் பெடோயின் பழங்குடி அரபு மக்களின் சமூக வழக்கமான "இஸ்லாமிய சட்டத்தில் கேள்விக்கிடமின்றி கடமைப்பட்டவை" என்பதை அடிப்படையாகக் கொண்ட ஹுடுட் (தண்டனை) ஐ அடிப்படை முன்மாதிரியாக  உலமாக்கள் ஏற்றுக்கொண்ட பின்மிதமான மற்றும் தீவிரவாதத்திற்கு இடையே உண்மையில் என்ன வித்தியாசம் இருக்கிறது.பின்னர்கருத்து 20 ல், மிதமானஉலமாக்கள்சிலைகளைஅழிப்பதைநியாயப்படுத்துவதாகத்தோன்றுகிறது,மேலும்முகமதுநபியின் "நபிஅல்லதுதோழர்களின்கல்லறைகளை" அழிப்பதைவெறுமனேவிமர்சிக்கின்றனர்.திறந்த கடிதத்தின் 22 வது கருத்தில், தி கலிபா என்ற தலைப்பில், மிதமான உலமாக்கள் மீண்டும் பாக்தாதி குழுவின் அடிப்படை முன்மொழிவுடன் ஒத்துப்போகிறார்கள்:"ஒருகலிபாஎன்பதுஉம்மாவின்ஒருகடமையாகும்என்றுஅறிஞர்கள்மத்தியில்உடன்பாடு (இட்டிஃபாக்) உள்ளது.பொ.ச. 1924 முதல் உம்மாவுக்கு ஒரு கலிபாவும் இல்லை."முஸ்லிம்களிடம் ஒருமித்த கருத்து இல்லாததற்கு பாக்தாடியை விமர்சிப்பதும், தேசத்துரோகம், கிளர்ச்சி போன்றவற்றிற்கு பாக்தாதியை வலுவான மொழியில் குற்றம் சாட்டுவதும் தொடர்கிறது.ஆனால் பிரச்சினை ஒன்றே.ஒரு கலிபாவைக் கொண்டிருப்பது உம்மாவின் கடமை என்று அழைக்கப்படும் அடிப்படை அனுமானத்தில் மிதமான உலமாக்கள் பாக்தாடியுடன் உடன்படுகிறார்கள்.இது இன்றைய காலகட்டத்தில் அபத்தமானது.கி.பி 7 ஆம் நூற்றாண்டில் தொடர்ந்து வாழ்வது போன்றிருக்கும் பாக்தாதி குழு மற்றும் மிதமான உலமாக்கள் இரண்டும் சமமாக காலாவதியானவை.
இஸ்லாமியவாதத்தின் இந்த புதைகுழியிலிருந்தும் வளர்ந்து வரும் தீவிரமயமாக்கலிலிருந்தும் நம்மை வெளிக்கொண்டுவர சூஃபி அமைப்புகளின் திறன் மீது நம்மில் பலர் மிகுந்த நம்பிக்கையை வைத்து வருகிறோம்.ஆனால் இந்திய சூஃபித்துவத்திலும் ஆழமான வஹாபிஸம் உள்ளது.
நாடுமுழுவதும்உள்ளபெரும்பாலானசூஃபிதலங்கள்இப்போதுபாலினப்பிரிப்புமற்றும்பாகுபாட்டைக்கடைப்பிடிக்கின்றன.ஏ ஆர் ரஹ்மான் போன்ற இசைக்கலைஞர்களுக்கு எதிராக விசுவாசதுரோகத்தின் ஃபத்வாக்களை வெளியிடத் தொடங்கியுள்ளனர்.சூஃபி இலக்கியங்கள் படிப்படியாக சூஃபி கல்வி நிலையங்களிலிருந்து அகற்றப்படுவதோடு மேலும் மத்திய கிழக்கில் நவீன பயங்கரவாதத்தின் தந்தை சையத் குத்பின் இலக்கிய புத்தகங்களால் மாற்றப்பட்டுள்ளன.அவர்கள் இனி ரூமி, இப்னுல் அரபி, ஷேக் சாதி, குவாஜா முயினுதீன் சிஷ்டி, பாபா ஃபரீத், அமீர் குஸ்ரோ போன்றோரின் புத்தகங்களை கற்பிக்க மாட்டார்கள்.தற்போதைய சலாபி-வஹாபி சூழலில் ஏற்றுக்கொள்ளப்படுவதற்கும், அத்வைத வேதாந்தத்திலிருந்து இஸ்லாத்தை வேறுபடுத்துவதற்கும்சூஃபித்துவத்தின் அடிப்படை ஆன்மீக தத்துவமான வஹததுல் வூஜூத் (இருத்தல் ஒற்றுமை, அத்வைதா) கூட நடைமுறையில் வஹததுல் சுஹுத் (தோற்றத்தின் ஒற்றுமை, வெளிப்படைவாதம்) மூலம் மாற்றப்பட்டுள்ளது.
இஸ்லாம் ஒரு ஆன்மீகப்பாதை என்ற கருத்து இந்தியாவில் அரசியல் இஸ்லாத்தின் சர்வாதிகாரத்திற்கு தெளிவாக வழிவகுக்கிறது.
நாம் எவ்வாறு நிலைமையை மீட்டெடுப்பது மற்றும் அமைதி மற்றும் சமூக நல்லிணக்கத்தை பேணுவது?எனது பார்வையில் முதல் தேவை,பெரும்பான்மையான இஸ்லாமிய நாடுகளால் ஐ.நா. சாசனம் மற்றும்மனித உரிமைகளின் உலகளாவிய பிரகடனத்தில் ஏற்கனவே கையெழுத்திடுவதன் மூலம் ஏற்றுக் கொள்ளப்பட்ட உலகளாவிய நடத்தை முறைகளின் அடிப்படையில் அமைதி மற்றும் பன்மைத்துவம், பகுத்தறிவு மற்றும் நவீனத்துவம் ஆகியவற்றின் இறையியலை உருவாக்குவது. மரபுசார் இலக்கியம் மற்றும் சமகால புலமைப்பரிசில் ஆகியவற்றின் அடிப்படையில் இந்த இறையியலை உருவாக்க முஸ்லிம்களிடம் வள ஆதாரங்கள் உள்ளன. செய்யப்பட வேண்டியது என்னவென்றால் இந்த வளங்களை திட்டமிட்ட முறையில், ஒழுங்காக அணிதிரட்டுவதே ஆகும்.
அமைதிமற்றும்பன்மைத்துவத்தின்இந்தவிரிவானமற்றும்ஒத்திசைவானஇறையியலின்பரிணாமம்தொடர்ச்சியானசெயல்முறையாகவேஇருக்கும்அதேநேரம்இந்த இறையியலின் ஏற்கனவே இருக்கும் அத்தியாவசிய கூறுகள் முஸ்லிம் மக்களிடம் கொண்டு வரப்பட வேண்டும்.
அத்தகைய ஒரு முயற்சியை மதகுருக்களிடமிருந்து, எந்தவொரு சாயலையும் எதிர்பார்க்க முடியாது என்பதால்,ஊடகங்கள் மற்றும் உண்மையான அடிமட்ட இயக்கங்கள் மூலம் இந்த இறையியலைபிரபலமாக ஏற்றுக் கொள்ளச் செய்ய வேண்டும்.
அடிப்படையில், ஜிஹாதிசம் ஒரு முஸ்லீம் பிரச்சினை மற்றும் முஸ்லிம்கள் அதை சமாளிக்க வேண்டும்.ஆனால் முஸ்லிம் அல்லாத பெரும்பான்மை நாடுகளில் உள்ள சமூகங்கள் விவாதத்தைத் தொடங்க உதவலாம்."கல்லறையில்வாழ்க்கைதொடங்குகிறது" என்றுநம்புவதற்குப், பெரும்பாலோர்போல, மூளைச் சலவை செய்யப்பட்ட ஒரு மதரஸா பட்டதாரியும் மற்ற குண்டுகளைப் போலவே விரைவாக வலுவிழக்கச் செய்யப்பட வேண்டிய ஒலி எழுப்பிக் கொண்டிருக்கும் குண்டு என்பதனைப் புரிந்து கொள்ள வேண்டும். சகிப்புத்தன்மையின்மை மற்றும் இனவெறி ஆகியவற்றின் விஷத்தை மசூதிகளிலோ அல்லது மதரஸாக்களிலோ பரப்ப ஒரு மதச்சார்பற்ற அரசாங்கம் யாரையும் அனுமதிக்கக்கூடாது.இந்திய மதரஸாக்களில் கற்பிக்கப்படுவது மற்றும் மசூதிகளில் நிகழ்த்தப்படும் பிரசங்கங்களின் உள்ளடக்கம் பற்றிய ஆய்வு அவசரமாக தேவைப்படுகிறது.
சகிப்புத்தன்மையற்றவர், மேலாதிக்கவாதி, பிரத்தியேகவாதிமற்றும்ஜீனோபோபிக்எனக்கண்டறியப்பட்டால், உலமா, மதரஸாக்கள் மற்றும் இமாம்கள் அவர்களை எதிர்கொண்டு மாற்றக் கேட்க வேண்டும்.
மேலும், இன்று முஸ்லீம் பெண்களின் அவல நிலையைச் சரிசெய்ய இந்திய அரசு குறைந்தபட்சம், 1961 ஆம் ஆண்டு பாகிஸ்தானின் முஸ்லீம் குடும்பச் சட்டக் கட்டளைச் சட்டத்தைப் போன்ற ஒரு சட்டத்தை அறிவிப்பது, ஒரே ஒரு வித்தியாசத்துடன், சிறுமிகளின் திருமண வயதை 14 ற்குப் பதிலாக அரசாணையில் உள்ளது போல 18ற்கு மாற்றுவது என்று செய்ய வேண்டும். 1950 களில் இந்து தனிப்பட்ட சட்டங்களில் சீர்திருத்தங்கள் செய்ததோடு சேர்த்து இதுவும் செய்யப்பட்டிருக்க வேண்டும், அல்லது குறைந்தபட்சம் பாக்கிஸ்தானில் முஸ்லீம் சட்டங்களில் சீர்திருத்தங்கள் செய்யப்பட்ட உடனேயே செய்திருக்க வேண்டும். அரை நூற்றாண்டு தாமதமானாலும் இனி ஒரு போதும் தாமதமாகக் கூடாது.ஆணாதிக்க இந்திய முஸ்லீம் உலமாக்கள் இன்னும் எதிர்த்து ஆரவாரம்செய்வார்கள். இந்த சீர்திருத்தங்கள் பாக்கிஸ்தான் மற்றும் பங்களாதேஷில் உள்ள அவர்களது வகையறாக்கள் ஏற்றுக் கொண்டு அரை நூற்றாண்டுக்கும் மேலானதால் அவர்களிடம் சொல்வதற்கு எதுவும் இல்லை.ஜனாதிபதி ஜெனரல் ஜியா’ஸ் நிஜாம்-இ-முஸ்தபா கூட இந்த சீர்திருத்தங்களை ஏற்றுக்கொண்டார்.அண்டை நாடான பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷில் உள்ள முஸ்லீம் தனிப்பட்ட சட்டங்களுக்கு ஒத்த இந்திய முஸ்லீம் தனிப்பட்ட சட்டத்தை கொண்டு வரும் சீர்திருத்தங்கள் முஸ்லிம் பெண்கள் மற்றும் விவேகமான முஸ்லீம் ஆண்களுக்கு நிறைய ஆறுதல்களை அளிக்கும்.மேலும், இது இஸ்லாமிய இறையியல் சொற்பொழிவில் இருக்கும் தேக்கநிலையை உடைக்கும். நபிகள் கொண்டு வந்த இஸ்லாத்தை முஸ்லிம்கள்மீட்டெடுக்கத் தொடங்குவதோடு 21 ஆம் நூற்றாண்டின் பெரிதும் மாறியுள்ள சூழ்நிலைகளில் அதை எவ்வாறு நடைமுறைப்படுத்தி வாழலாம் என்பதை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
[இந்தகட்டுரையின்சுருக்கப்பட்டபதிப்புகோவாவில்இந்தியாஅறக்கட்டளைஏற்பாடுசெய்தஇந்தியாஐடியாஸ்கான்க்ளேவில்வழங்கப்பட்டது (நவ. 15--17, 2015)

No comments:

Post a Comment