Friday, February 28, 2020

Religious and Theological Underpinning of Global Islamist Terror உலகளாவிய இஸ்லாமிய தீவிரவாதத்தின் மத மற்றும் இறையியல் அடிப்படை





By Sultan Shahin, Founder-Editor, New Age Islam
உலகளாவிய இஸ்லாமிய தீவிரவாதத்தின் மத மற்றும் இறையியல் அடிப்படை: 2016ல் ஜெய்ப்பூரில் நடைபெற்ற சர்வதேச தீவிரவாத எதிர்ப்பு மாநாட்டில் ஆற்றப்பட்ட உரையின் முழு எழுத்து வடிவம்
சுல்தான் ஷாஹின்ஸ்தாபக ஆசிரியர்நியூ ஏஜ் இஸ்லாம்
3 ஃபெப்ருவரி 2016
ஜெய்ப்பூரில் நடந்த சர்வதேச தீவிரவாத எதிர்ப்பு மாநாட்டில் சுல்தான் ஷாஹினின் உரை
இஸ்லாமிய அரசு என்று அழைக்கப்படுபவை மற்றும் அபுபக்கர் அல்-பாக்தாடியால் சுயமாக அறிவிக்கப்பட்ட கிலாபத் (இயக்கம்)ஆகியவைஒரு வருடத்தில் உலகெங்கிலும் உள்ள 100 நாடுகளில் இருந்து 30,000 க்கும் மேற்பட்ட முஸ்லிம்களை எளிதாகவும், விரைவாகவும் ஈர்த்திருப்பது பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. ஆனால் இந்தியாவில் இருக்கும் எங்களுக்கு இது ஒரு ஆச்சரியமாக வந்திருக்கக் கூடாது. உலகளாவிய கிலாஃபத் யோசனையை முஸ்லீம் விரும்புவது நன்கு அறியப்பட்டதாகும்.நூறு ஆண்டுகளுக்கு முன்னர் இந்திய துணைக் கண்டத்தில் இருந்து மட்டும், குறைந்தது 18,000 முஸ்லிம்கள் தங்கள் வீடுகளையும், அரசு வேலைகளையும் கூட விட்டுவிட்டு, கடைசி ஒட்டோமான் கிலாஃபத்துக்காகப் போராட அணிவகுத்துச் சென்றனர். உண்மையில் எளிமையாகச் சொல்வதென்றால் இது பைத்தியக்காரத்தனம்.பெரும்பாலானவர்கள் தங்கள் வாழ்க்கையை பாழாக்கிக் கொண்டனர், சிலர் இறந்தனர். ஆனால் அவர்கள் போர்வீரர்கள் என்றும் தியாகிகள் என்றும் கருதப்படுகின்றனர். மௌலானா அபுல் கலாம் ஆசாத் உள்ளிட்ட முக்கிய மதகுருக்கள்,பிரித்தானிய இந்தியா தாருல் ஹர்ப் (மோதலின் நிலம், காஃபிர்களால் ஆளப்படுகிறது) என்று கருதப்டுவதாகச் சொல்லி, இங்கிருந்து ஜிஹாத் அல்லது ஹிஜ்ரத் (குடியேற்றம்) மதக்கடமை என்று கோரி (ஃபத்வாக்களை)சமயக்கட்டளைகள் வெளியிட்டனர்,
எனவே, முஸ்லிம்களில் ஒரு பெரும் பகுதியினர், கிலாஃபத் இவ்வுலகையே ஆளும், பிற மதங்களை அகற்றி குறிப்பாக அனைத்து வகையான உருவ வழிபாட்டையும் அகற்றிஇஸ்லாத்தின் உண்மையை நிலைநாட்டும் என்பதில் கவரப்பட்டது ஒன்றும் புதியதல்ல. பாக்தாதி தனது கிலாஃபத்தை அறிவித்தபோது, அது இந்தியாவில் பல முஸ்லிம் செய்தித்தாள்களில் வரவேற்கப்பட்டது. நத்வதுல் உலமாவிலிருந்து ஒரு செல்வாக்கு மிக்க மதகுரு, தனது முகநூல் பக்கத்தில் கலீஃபா என்று அழைக்கப்படுபவருக்கு ஒரு கடிதத்தை இடுகையிடும் அளவுக்குச் சென்று, அவரை அனைத்து முஸ்லிம்களின் ஆன்மீகத் தலைவரான அமீருல் மோமினீன் என்று முகவரியிட்டிருந்தார். அவர் எந்தவொரு எதிர்ப்பையும் எதிர்கொள்ளவில்லை, நட்வாவிடமிருந்தோ அல்லது தாருல் உலூம் தியோபந்திடமிருந்தோ கூட இல்லை.
இஸ்லாமிய அரசு என்று அழைக்கப்படுபவை அதன் பயங்கரமான கொடூரங்களையும், பாலியல் அடிமைத்தனம் போன்ற மனிதாபிமானமற்ற நடைமுறைகளையும் பெருமையுடன் ஒளிபரப்பியதால், சமூகம் தர்மசங்கடத்தில் உள்ளது மட்டுமின்றி இப்போது ஆதரவும் முடக்கப்பட்டுள்ளது.ஆனால் இதை பாசாங்குத்தனம் என்று மட்டுமே விவரிக்க முடியும்.இந்தியாவின் மிகவும் பிரபலமான இஸ்லாமிய போதகரும், அஹ்ல்-இ-ஹதிதி தொலைகாட்சி நிபுணருமான ஜாகிர் நாயக், “அடிமைகள் மற்றும் மற்றும் போரில் பிடிக்கப்பட்ட பெண்களுடன் உடலுறவு கொள்வதற்காக முஸ்லிம்களுக்கு அல்லாஹ் ஹலால் செய்திருக்கிறான்” என்று பல ஆண்டுகளாகச் சொல்லிக் கொண்டு இருக்கிறார். முஸ்லீம் மதத் தலைவர்கள் ஒருபோதும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.ஆனால் ஐஎஸ்ஐஎஸ் இந்த ஃபத்வாக்கள் (சமயக்கட்டளைகள்) மற்றும் வஹாபி / சலாபி போதனைகளைத் தங்களது தர்க்கரீதியான முடிவுக்குக் கொண்டு செல்லும்போது, உண்மையில், யாசிடி, கிறிஸ்தவ மற்றும் ஷியா பெண்களைக் கடத்திச் சென்று பாலியல் அடிமைகளாக்கும்போது, சமூகம் தர்மசங்கடத்திற்குள்ளாகிறது, சில மதகுருமார்கள் இஸ்லாத்திற்கு தீவிரவாதத்துடன் எந்தத் தொடர்பும் இல்லை என்று கூறத் தொடங்குகிறார்கள்.
ஜெய்ப்பூரில், சர்வதேச தீவிரவாத எதிர்ப்பு மாநாட்டில் சுல்தான் ஷாஹினின் உரை
உண்மைதான், இஸ்லாத்திற்கு தீவிரவாதத்துடன் எந்தத் தொடர்பும் இல்லை.
இது வீடுபேற்றிற்கான ஆன்மீகப் பாதை, உலகில் ஆதிக்கம் செலுத்துவதற்கான அரசியல் சித்தாந்தம் அல்ல.நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கடைசியில் கடவுளின் தூதராக நியமிக்கப்பட்ட ஒரு மறைஞானி. என்னவானாலும் அமைதியைக் வலியுறுத்தும் எண்ணற்ற வசனங்கள்  குர்ஆனில் உள்ளன, ஓர் அப்பாவியைக் கொலை செய்வது மனித இனப்படுகொலைக்கு நிகரானது மற்றும் ஓர் அப்பாவிக்குக் கொடுக்கும் பாதுகாப்பு மனிதகுலத்தைப் பாதுகாப்பதற்கு நிகர் என்று சொல்லும் அளவிற்குச் செல்கிறது (அல் குர்ஆன் 5:32). முற்கோளாகக் கொள்ளப்பட்ட,நபிகளின்பொன்மொழிகள் எனப்படும் அஹதித்  (ஹதீஸின் பன்மை) அதே போன்று உண்மையானதே. புகழ்பெற்ற ஹுடைபியா ஒப்பந்தத்தில் முஸ்லிம்களுக்கான நீதி மற்றும் நியாயத்தைக் கூடப் பொருட்படுத்தாமல் நபிகள் சமாதானத்தை ஏற்றுக்கொண்டதாக நபியின் சொந்த நடத்தை (சீரத்) காட்டுகிறது.அகழிப் போரில் (கஸ்வா அல்-கண்டாக், பொ.ச. 627) இரத்தக்களரியைத் தவிர்ப்பதற்காக, தனது சகாக்களுடன் மதீனாவைச் சுற்றி பள்ளம் (அகழி)தோண்டி மதீனா நகரத்தைப் பாதுகாத்தார். அதை ரத்தக்களரியின்றிக் கைப்பற்றியப் பிறகு (பொ.ச. 629)அந்தக் காலங்களில் நடைமுறையில் இருந்த வழக்கப்படி, மெக்கன்கள் கைதுசெய்து பொதுப் படுகொலை செய்த போது அவர் எல்லா மெக்கன்களுக்கும் பொதுமன்னிப்பு அறிவித்தார். ஆகவே, அப்பாவிகளுக்கு எதிரான அனைத்து வன்முறைகளையும் தடைசெய்வதோடு ஆக்கிரமிப்புக்கு எதிராக மீண்டும் மீண்டும் எச்சரிப்பது, குறிப்பாகக் குர்ஆன் மட்டுமல்ல, இஸ்லாம் வளர்ந்து வந்த காலத்தில் சோதனையான நேரங்களில் நபிகளுமே கூடியவரை  வன்முறையைத் தவிர்த்தார்.
மதரஸாக்களும் (இஸ்லாமியக் கல்விக்கூடங்களும்) மசூதிகளும் வன்முறையையும் பயங்கரவாதத்தையும் வெளிப்படையாகப் பிரசங்கிக்கவில்லை என்பது உண்மைதான்.ஆனால் மதரஸாக்களில் உள்ள உரைநடைப் புத்தகங்கள் மேலாதிக்கம், இனவெறி, சமுதாயத்துடன் ஒட்டாமல் தனித்திருத்தல் மற்றும் சகிப்பின்மை ஆகியவற்றைப் போதிக்கின்றன என்பதும் உண்மை.இவ்வாறு அவர்கள் முஸ்லீம் / காஃபிர் இணைந்து வாழ முடியாத எதிரிகள் என்ற கருத்தை இருமடங்காக்கி தங்கள் மாணவர்களிடையே கொஞ்சம் கொஞ்சமாகப் புகுத்துவதன் மூலம் போர்க்குணமிக்க சித்தாந்தங்களுக்கான அடித்தளத்தைச் செய்கிறார்கள்.இதன் விளைவாக, சில முஸ்லிம்கள் தங்களைத் தாங்களே பிரதானக் கூட்டத்திலிருந்து பிரித்து, அந்நியப்படுத்திக் கொள்கின்றனர்.உதாரணமாக,200 க்கும் மேற்பட்ட நாடுகளில் 150 மில்லியன் ஆதரவாளர்களைக் கொண்ட ஒரு உலகளாவிய முஸ்லீம் மிஷனரி அமைப்பான தப்லிகி ஜமாஅத்,முஸ்லிம்களைஒரு தனி அடையாளத்தைப் பராமரிக்கும்படி சொல்லி மேலும் முஸ்லிம் அல்லாத பெரும்பான்மைக்கும் முஸ்லிம்களுக்கும் உள்ள பொதுவான பழக்கவழக்கங்களைப் பின்பற்றுவதையும் தடைசெய்து பிரதான மக்கள் கூட்டத்திலிருந்து பிரிப்பதில் முழு கவனம் செலுத்துகிறது. இந்த வஹாபி / சலாபி அமைப்பு சமீபத்தில் பாகிஸ்தான் பஞ்சாபில் உள்ள பல்கலைக்கழக வளாகங்களில் இருந்து தடைசெய்யப்பட்டது, ஆனால் இந்தியாவில் அத்தகைய தடைகளை எதிர்கொள்ளவில்லை.
உண்மையில், ஒரு முஸ்லீம் எல்லாத் தரப்பிலிருந்தும் ஜிஹாத்திற்காக அழைக்கும் பிரசங்கங்களால் பொழியப்படுகிறார்; ஒரு ஜிஹாத்,இது அதன் அனைத்து ஆன்மீக உள்ளடக்கங்களிலிருந்தும் கத்தரிக்கப்பட்டு, வெறுமனே கிடால், போருக்கு ஒரு அர்த்தமாகப் பயன்படுத்தப்படுகிறது.
உதாரணமாக, 20 ஆம் நூற்றாண்டின் உருது நாவலாசிரியர் நாசிம் ஹெஜாஜி எழுதிய வரலாற்று புனைகதைகள் கூட, ஜிஹாத்துக்கான அழைப்பாக எடுத்துக் கொள்ளப்படலாம்,இது வெளிப்படையான ஜிஹாதி இலக்கியங்களை விட மிகவும் வலிமை வாய்ந்ததாக.மிகவும் பிரபலமான உருது புனை கதைகளில், உதாரணமாக, தஸ்தான்-இ-அமர் ஹம்சா எனும் மைய பாத்திரம், ஒரே கடவுள் என்பதை நம்பாததனால் காஃபிர் எனப்படும் பேய்களுடன்மையப் பாத்திரம் போராடுகிறது, ஒரு முஸ்லீம் சூஃபி புனிதத்தலங்களில் கேட்கும் பக்திக் கவிதைகளில் பின்வருபவை உள்ளன: “ஆஜ் பி தார்தே ஹைன் காஃபிர் ஹைதரி தல்வார் ஸே,” அதாவது, இன்றும் காஃபிர்கள் நான்காவது கலீஃபாவான ஹஸ்ரத் அலியின் வாளுக்குப் பயப்படுகிறார்கள்.அரேபியர்களால் முதலில் எழுதப்பட்ட நபியின் சுயசரிதைகள் கூட அவற்றை “மகாஜி ரசூலுல்லாஹ்” என்று அழைத்தன, அதன் அர்த்தம் நபியின் போர் விவரங்கள்.முதல் முஸ்லிம்களான அரேபியர்களால் அமைதி, மிதமான தன்மை, ஹுகூகுல் இபாத் (மனித உரிமைகள்) மற்றும் மதத்திற்கான ஞானார்த்தமான அணுகுமுறை ஆகியவற்றில் அவர் கொண்டிருந்த பக்தியைக் கொண்டாட முடியவில்லை.ஒரு சிறந்த போர்வீரனாக அவரை முன்வைத்து ஹீரோவாக மட்டுமே அவர்களால் கொண்டாட முடிந்தது, ஆனால் அவர் அப்படியானவர் அல்ல.
அவர் மிகவும் அரிதாக ஒரு முறையோ அல்லது இரண்டு முறையோ, தீர்க்கதரிசியாகி 14 ஆண்டுகளுக்குப் பிறகு, 54 வயதில், முற்றிலும் பாதுகாப்பிற்காகஒரு வாளைத் தூக்கினார்.
1400 ஆண்டுகளாக ஒவ்வொரு வெள்ளி பிரசங்கத்திலும் ஒரு முஸ்லீம் வாரந்தோறும் கேட்டுக்கொண்டிருக்கும் பிரார்த்தனை, மேலாதிக்கம், இஸ்லாம் மட்டுமே என்ற தனித்துவம், இனவெறி மற்றும் சகிப்பின்மை போன்ற அனைத்தையும் உருவாக்கும் குஃபர் (காஃபிர்கள்) – இறைவனை நம்பாதவர்கள் மீதான வெற்றி, உண்மையான இஸ்லாம் மதத்தை ஸ்தாபித்தல், உலகம் முழுவதும் ஆதிக்கம் செலுத்துதல், கிரகத்திலிருந்து உருவ வழிபாட்டை ஒழித்தல் மற்றும் பல.
இப்படியாக, காஃபிருடன் ஒரு நிரந்தர மோதலின் யோசனை, நம் நரம்புகள் வழியாக ஓடுகிறது.
போர்க்குணமிக்க கருத்தியலாளர்களால் அடிக்கடி மேற்கோள் காட்டப்படும் வசனங்களில், கடவுள் குர்ஆனில் இரண்டு இடங்களில் (8:12 மற்றும் 3: 151) முஸ்லிம்களுக்கு உறுதியளிக்கிறார், “அவர் குஃபர்களின் (நம்பிக்கையற்றவர்கள்) இதயங்களில் பயங்கரத்தை ஏற்படுத்துவார்.”ஆரம்பகால இஸ்லாத்தில் முஸ்லிம்கள் நடத்திய இருத்தலியல் போர்களின் போது,  வெளிப்படுத்தப்பட்ட வேறு சில வசனங்கள் போலவே  அதே போன்ற போர்க்குணம் மிக்க, சகிப்புத் தன்மையற்ற சூழல் வசனங்கள். எந்தவொரு பகுத்தறிவு முஸ்லிமும் இன்று இந்த சூழ்நிலை யுத்த வசனங்கள் இனி நமக்குப் பொருந்தாது என்று கூறுவார்கள்.ஆனால் அப்படிச் சொல்லப்ப்டும் பயங்கரவாத சித்தாந்தங்களை மறுக்க முற்படும் அந்த மிதமான அறிஞர்களைக் கூட நீங்கள் காண முடியாது.உண்மையில், மறுப்புகள் நிஜமாக பயங்கரவாதம் மற்றும் வன்முறையின் அடிப்படை இறையியலை நியாயப்படுத்துகின்றன.
சிரியா மற்றும் ஈராக்கில் “ரெஃப்யூட்டிங்க் ஐஎஸ்ஐஎஸ்” (ஐஎஸ்ஐஎஸ்ஸை மறுப்பது)” என்ற தலைப்பில் ஒரு அரபு புத்தகத்தின் ஒரு லட்சம் பிரதிகள் சமீபத்தில் விநியோகிக்கப்பட்டுள்ளன.இது இணையத்திலும் ஆங்கிலத்தில் கிடைக்கிறது. எழுத்தாளர் ஷேக் முஹம்மது அல்-யாக்கோபிநிச்சயமாக, அவரது மறுப்பில் நேர்மையானவர்.ஆனால் அவரும் அதே தொகுப்புகளான இறுதி நேர தீர்க்கதரிசனஉரைகளை மேற்கோள் காட்டுகிறார், பாக்தாதியும் அவரது தனிக்குழுவும் முட்டாள்கள் என்பதையும், போராடப்பட வேண்டும் என்பதையும் நிரூபிக்க நாடுவதால் இதே தொடர் மில்லினிய தீர்க்கதரிசனங்களுக்கு நம்பகத்தன்மையை அளிக்கிறது. ஆகவே, அவர் உண்மையில் ஐஎஸ்ஐஎஸ்ஸின் பிரச்சாரமான ஊழிஇறுதியும் கடவுளின் வெளிப்பாடும் பற்றிய செய்திகள்(அப்போகாலிப்ஸ்) என்று கூறப்படுபவற்றைவலுப்படுத்துவதைமொத்தமாகச் செய்து முடிக்கிறார்.ஊழிஇறுதியும் கடவுளின் வெளிப்பாடும் (அபொகாலிப்ஸைப்) பற்றி அதிகம் பேசாத அல்-கொய்தாவைப் போலன்றி, ஐஎஸ்ஐஎஸ் பார்வை பெரும்பாலும் வெளிப்பாடுபற்றியதாகும்.அவர்கள் தங்கள் போருக்கான நியாயத்தை தீர்க்கதரிசனமாகக் கூறப்பட்ட இறுதி கால யுத்த உரைகள் என்பதை அடிப்படையாகக் கொண்டுள்ளனர்.
தபீக் என்று (அவர்களின் ஒலிபெருக்கியின் பெயரும் கூட) என்று அழைக்கப்படும் ஒரு இராணுவ முக்கியத்துவம் வாய்ந்திராத நகரத்தை, இறுதி நேர தீர்க்கதரிசனங்கள் இந்த நகரத்தில் ஒரு போரைக் குறிக்கின்றன எனும் காரணத்தினால், கைப்பற்றி பல மனிதர்களை அவர்கள் தியாகம் செய்தனர்,  
முஸ்லீம் இளைஞர்களை இறுதி நேர யுத்தத்தில் பங்குகொள்ளச் செய்ய ஈர்ப்பதற்கு ஐஎஸ்ஐஎஸ் பயன்படுத்தும் முக்கிய கருவிகளில் ஊழிஇறுதி (அபோகாலிப்டிக்) தீர்க்கதரிசனங்களும் ஒன்றாகும்.தீர்க்கதரிசனம் கூறியது போல,இஸ்லாம் உலகை வென்றவுடன், தீர்க்கதரிசனம் கூறியது போல, எல்லா காஃபிர்களையும் அழித்துஇஸ்லாம் உலகை வென்றவுடன் உலகம் ஒரு சில ஆண்டுகளில் முடிவடையப் போகிறது என்றால், ஏன் வெல்லும் பக்கத்தில் இருக்கக்கூடாது. இந்த வாதம் பலருக்கும் விடுக்கும் ஒரு வேண்டுகோள்.எனவே ஐஎஸ்ஐஎஸ்ஸை மறுக்க விரும்பும் ஒருவர் தங்கள் தலைமை பிரச்சார கருவியை வலுப்படுத்தக்கூடாது. ஆனால் இந்த மதகுரு அல்லது வேறு எவரும் எதுவும் செய்ய இயலாது ஆனால் ஐஎஸ்ஐஎஸ்ஸை பலப்படுத்தும்.அனைத்து மதகுருக்களும் தீவிரவாதிகளைப் போலவே அதேஅடிப்படை இறையியலை நம்புகிறார்கள். இந்தக் கணிப்புகள் அஹதீத்லிருந்து (தீர்க்கதரிசியின் உரைகள் என்று கருதப்படுபவை, ஹதீஸின் பன்மை.) மற்றும் அனைத்துச் சிந்தனைப் பள்ளிகளிலிருந்துமான உலேமாக்களூம் (அறிஞர்கள்) அதனை தோற்றத்தின் வெளிப்பாட்டிற்கு ஒத்ததாகக் கருதுகின்றனர். நபியின் மறைவுக்குப் பின்னர் 300 ஆண்டுகள் வரை சேகரிக்கப்பட்டு அவருடையதாகக் கருதப்படும் இந்த இறுதி நேர தீர்க்கதரிசனங்கள் உண்மைத்தன்மையை கேள்விகேட்பதன் மூலமே இந்த இறுதி நேர தீர்க்கதரிசனங்களை  பயனளிக்கும் வகையில் கேள்விக்குள்ளாக்க முடியுமே அல்லாமல் அவற்றை தோற்றத்தின் வெளிப்பாட்டிற்கு ஒத்ததாக அழைப்பதில் அல்ல.
இந்த தீர்க்கதரிசனங்களில் சிலகுர்ஆன் 4: 159; 43:61 ல் உள்ள இரண்டு உருவக வசனங்களின் ஊக வாசிப்புகளிலிருந்தும் வருகின்றன. முஸ்லிம்கள் அவற்றின் பொருளைப் பற்றி ஊகிக்க வேண்டாம் என்றும் அவற்றைத்தனியாக விட்டுவிடவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். ஆனால், நிச்சயமாக, முஸ்லிம்கள் செய்கிறார்கள், இதன் விளைவாக ஊழிஇறுதிப் போர் தீர்க்கதரிசனக் காட்சிகள்.
இதேபோல், அதன் அடிப்படை இறையியலில், உலகெங்கிலும் இருந்து 120 அறிஞர்கள் சமீபத்தில் (ஆகஸ்ட் 2015) வெளியிட்ட 14,000 சொற்கள் அடங்கியசமயக்கட்டளைகள் (ஃபத்வா) கூட தீவிரவாத சித்தாந்தங்களுடன் உடன்படுகிறது.அவர்களின் "அல்-பாக்தாதிக்கு திறந்த கடிதம்" ஹதீஸை வெளிப்பாட்டுக்கு ஒத்ததாக அழைக்கிறது, அப்பாவி பொதுமக்கள் கொல்லப்படுவதற்கான அனைத்து நியாயங்களும் நபிகள்டையவை எனப்படும் ஒரு ஹதீஸிலிருந்து வந்தவை என்பதை நன்கு அறிந்தும்,தைஃப்பில் நடந்த தாக்குதலில் அப்பாவிகளைக் கொல்லகவண் (மஞ்சனிக்) பயன்படுத்துவதற்கான அனுமதி:(சாஹிஹ் முஸ்லீம் 19: 4321 & சாஹிஹ் புகாரி 4: 52: 256). பேரழிவிற்கு ஆயுதங்களைப் பயன்படுத்துவதை நியாயப்படுத்த அல்-கொய்தாவால் இந்த ஹதீஸ் பயன்படுத்தப்படுகிறது.
விளக்கம் 16ல். ஹுதுத் (தண்டனை), மிதமான ஃபத்வா - சமயக்கட்டளைஒரு பொதுவான விதியை நிறுவுகிறது:"ஹுதுத் தண்டனைகள் (விசுவாசதுரோகத்திற்கான மரணம் போன்றவை) குர்ஆன் மற்றும் ஹதீஸில் நிர்ணயிக்கப்பட்டுள்ளன, மேலும் அவை இஸ்லாமிய சட்டத்தில் கேள்விக்குள்ளாக்க இடமின்றி கடமையாக்கப்பட்டுள்ளது."பாக்தாதி பழங்குடியினரின் அடிப்படைக் கூற்றுக்களை ஏற்றுக்கொண்ட பின்னர், இஸ்லாமிய அரசு என்று அழைக்கப்படுபவற்றில் இது செயல்படுத்தப்படுவதை விமர்சிக்கிறது.குர்ஆனின் சில வசனங்கள் மற்றும் ஏழாம் நூற்றாண்டின் பெடோயின் பழங்குடி அரபு மக்களின் சமுதாய பழக்கவழக்கக் கோட்பாடுகளான “கேள்விக்குள்ளாக்க முடியாத கடமையாக்கப்பட்ட இஸ்லாமிய சட்டம்” என்பதை அடிப்படையாகக் கொண்ட ஹுதுத் (தண்டனைகள்) என்ற அடிப்படைக் கூற்றுக்களை மிதமான உலமாக்கள் ஏற்றுக்கொண்ட பின், மிதமான மற்றும் தீவிரவாதத்திற்கு இடையே உண்மையில் என்ன வித்தியாசம் இருக்கிறது?
சமயக்கட்டளைகளின் - ஃபத்வாவின் 20 வது கருத்து விளக்கத்தில்ஷிர்க்கின் (உருவவழிபாட்டின்) அனைத்துவெளிப்பாடுகளையும்அழித்துஅகற்றுவதுஇஸ்லாமியகடமைஎன்றுபேசுவதன்மூலம்மிதமான உலமாக்கள் சிலைகள் மற்றும் சூஃபி ஆலயங்களை அழிப்பதை நியாயப்படுத்தி, தீர்க்கதரிசிகள் மற்றும் அவர்களுடன் இருந்தவர்களின் கல்லறைகளை அழிப்பதை மட்டுமே எதிர்க்கிறது என்று தெரிகிறது.
வெளிப்படையான கடிதத்தின் 22 வது கருத்தில், தி கலிபா என்ற தலைப்பில், மிதமான உலமா மீண்டும் பாக்தாதி குழுவின் அடிப்படை முன்மொழிவுடன் உடன்படுகிறது: "ஒரு கலிபா என்பது இஸ்லாமிய சமுதாயத்தின்-உம்மாவின்  ஒரு கடமையாகும் என்று அறிஞர்கள் மத்தியில் உடன்பாடு (இட்டிஃபாக்) உள்ளது. பொ.கா. 1924 முதல் உம்மாவுக்கு ஒரு கலிபா இல்லை.
இந்த மிதமான ஃபத்வா வழக்கொழித்தல் கோட்பாட்டின் மீதான நம்பிக்கையைக் கூட வெளிப்படுத்துவதன் மூலம் பயங்கரவாத சித்தாந்தவாதிகள் இஸ்லாத்தின் ஆரம்பத்தில் வந்த அமைதியான மெக்கன் வசனங்களை வழக்கொழித்தனர்.இப்படியாகஷேக் யாகூபியின் “ஐஎஸ்ஐஎஸ்ஸை மறுப்பது” போலவே இந்த ஃபத்வாவும் பயங்கரவாத சித்தாந்தத்தைப் பலப்படுத்துகிறது, அதே நேரத்தில் அதன் நடைமுறையை விமர்சிக்கிறது.
இது வியப்பல்ல. பெரும்பாலான முஸ்லிம்களால் பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட இறையியல், ஜிஹாதி இறையியலின் பின்வரும் அம்சங்களுடன் உடன்படுகிறது:
1.       இது, கடவுள், தன் கிருபையை இப்பிரபஞ்சத்தின்  ஒவ்வொரு அணுவிலிருந்தும் வெளிப்படுத்தும் மெய்ஞான உணர்வு அல்லது பிரபஞ்சத்தின் நுண்ணறிவானவர் எனும் சூஃபி அல்லது வேதாந்தக் கருத்திற்கு எதிராகக் கடவுள் மன்னிக்கும் குணமற்றவர், மனிதவடிவுடைய விலங்கு, அவரது தனித்தன்மையை நம்பாதவர்களுடன் எப்போதும் போர் புரிபவர் என்று கருதுகிறது;
2.       குர்ஆன் கடவுளால் உருவாக்கப்படாத அம்சம், பரலோக பெட்டகத்தில் கிடந்த அழிவற்ற நிலையான புத்தகத்தின் நகல்.எனவே அதன் அனைத்து வசனங்களும் அவற்றின் நேரடி அர்த்தத்தில், சூழலுக்கு அப்பாற்பட்டு முஸ்லிம்களுக்கு ஒரு நித்திய வழிகாட்டலாகக் கருதப்பட வேண்டும்;
3.       அஹதீத் அல்லது தீர்க்கதரிசி மொஹம்மத் (ஸல்) அவர்களின் பொன்மொழிகள் அவரது மறைவுக்குப் பிறகு இருநூறிலிருந்து முன்னூறு ஆண்டுகளுக்குப் பிறகு சேகரிக்கப்பட்டிருந்தாலும்தோற்றத்தின் வெளிப்பாட்டிற்கு ஒத்ததாகக் கருதப்படுகிறது. இதுதான் குடிமக்கள் படுகொலைகளையும் பெண் போர்க் கைதிகளுடன் உடலுறவையும் ஐஎஸ்ஐஎஸ் நியாயப்படுத்த அனுமதிக்கிறது.இது, ஐஎஸ்ஐஎஸ்,தோற்றத்தின் வெளிப்பாட்டின், இறுதி நேர யுத்தக் காட்சியை செயல்படுத்த உதவுகிறது மற்றும் முஸ்லீம் இளைஞர்களை உலகில் இஸ்லாத்தை வெற்றிபெறச் செய்வதற்கான இறுதி யுத்தம் என்று சொல்லப்பட்டதில் பங்கேற்க அவர்களை ஈர்க்க உதவுகிறது;
4.       குர்ஆனின் கடைசி வசனங்களில் ஒன்றில் மதத்தை நிறைவு செய்வதாக கடவுள் அறிவித்த 120 ஆண்டுகளுக்குப் பிறகு அவை முதலில் குறியிடப்பட்டிருந்தாலும்ஷரியா சட்டங்கள் தெய்வீகமாக உள்ளன;
5.       இஸ்லாத்தின் ஆறாவது தூணாக கிடால் (போர்) என்ற பொருளில் ஜிஹாத்;
6.       குர்ஆனின் சில ஆரம்ப வசனங்கள் வழக்கொழிக்கப்பட்டு, அதற்குப் பதிலாக சிறந்த மற்றும் பொருத்தமான பிற்கால வசனங்களால் மாற்றப்பட்டுள்ளன. இந்த வழக்கொழித்தல் ஒருமித்த கோட்பாடு தீவிர சித்தாந்தவாதிகளால்,அமைதி, பன்மைவாதம், பிற மத சமூகங்களுடன் சகவாழ்வு, இரக்கம், அண்டை நாடுகளுடனான நட்புறவு போன்ற அனைத்தும் உட்படுத்திய எல்லா 124 அடிப்படை வசனங்களையும் வழக்கொழித்து, மாறாக, போர், இனவெறி மற்றும் சகிப்பின்மை ஆகியவற்றின் பிற்கால மெதினன் வசனங்களால் மாற்றுவதற்கு பயன்படுத்தப்படுகிறது;
7.       ஹிஜ்ரா (தாருல் இஸ்லாமிற்கு இடம்பெயர்வு - இஸ்லாத்தின் தங்குமிடம்- தாருல் ஹராபிலிருந்து (அவநம்பிக்கை மற்றும் மோதலின் நிலம்) ஒரு மதக் கடமையாகவும், பக்திச் செயலாகவும்;
8.       ஒரு கலிபா என்பது உம்மா (உலகளாவிய முஸ்லீம் சமூகம்) மீதான ஒரு கடமையாகும்.
ஜமாத்-இ-இஸ்லாமியை நிறுவிய இருபதாம் நூற்றாண்டு அறிஞர்கள்,எகிப்தின் முஸ்லீம் சகோதரத்துவ அமைப்பின் சையத் குதுப் (1906-1966) மற்றும் இந்தியாவின் பின்னர் பாகிஸ்தானின் அபுல் ஆ’லா மௌதுடி (1903-1979) நவீன இஸ்லாமிய பயங்கரவாதத்தின் அல்லதி ஜிஹாதிசத்தின் இரண்டு தந்தையர்களாகக் கருதப்படுகிறார்கள். ஜிஹாதி சொற்பொழிவுக்கு மகத்தான பங்களிப்பை வழங்கிய சமகால சித்தாந்தவாதிகள் அப்துல்லா யூசுப் அஸ்ஸாம் (1941-89) மற்றும் அபு முஹம்மது அல் மக்திசி (பிறப்பு: 1959), முதலியோர்.
பல முஸ்லீம் அறிஞர்கள் இன்று இந்த போர்க்குணமிக்க அறிஞர்களிடமிருந்து தங்களை விலக்கிக்கொள்வார்கள்.ஆனால் ஜிஹாதிசம் பலருக்கும் மிகவும் பிரபலமானதாகவும், கவர்ச்சிகரமானதாகவும் இருப்பதற்கான காரணம் என்னவென்றால், ஜிஹாதிச இறையியல்,முக்கிய மரபார்ந்த அரபு இறையியலாளர்களான இப்னு-இ-தைமியா (1263-1328) மற்றும் முகமது இப்னு-இ அப்துல் வஹாப் (1703) ஆகியோரால் முன்வைக்கப்பட்ட பிரபலமான இறையியலை அடிப்படையாகக் கொண்டது அல்லது அதே விஷயம் சார்ந்த முக்கிய இந்திய இறையியலாளர்களான முஜாதித் ஆல்ஃப்-இ-சானி ஷேக் அஹ்மத் சிர்ஹிந்தே ((1564 –1624) மற்றும் ஷா வாலியுல்லா டெஹ்லவி (1703–1762).
இப்போது நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக, முக்கிய முஸ்லீம் இறையியலாளர்கள் இஸ்லாமிய வரம்பை விரிவுபடுத்துவதற்காக மேலாதிக்கம், சகிப்பின்மைமற்றும் வன்முறை ஆகியவற்றின் ஒத்திசைவான மற்றும் விரிவான இறையியலை உருவாக்குவதில் ஈடுபட்டுள்ளனர்.ஒருவரின் சொந்த நலன் தாழ்வதற்கு எதிரான போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கும் ஜிஹாத்தின் மிக உயர்ந்த வடிவத்திற்குப் பதிலாகஅவர்கள் முஸ்லிம்களுக்கு ஜிஹாத்தின் கீழ் வடிவத்தை, அதாவது போர்வடிவத்தைக்கட்டாயமாக்கியுள்ளனர். இஸ்லாத்தின் வழிகாட்டிகள் நிறுவியிருக்கும் இறையியல், அடிப்படையில், இஸ்லாம் உலகை வெல்ல வேண்டும் என்றும் அந்த இலக்கை நோக்கி பாடுபடுவது மற்றும் தங்களால் இயன்ற எந்த வகையிலும் பங்களிப்பு செய்வது அனைத்து முஸ்லிம்களின் மதக் கடமையாகும் என்று அறிவிக்கிறது.
இந்த இறையியலாளர்கள் அனைவரும் சாராம்சத்தில் இஸ்லாமியம் ஒரு மேலாதிக்கவாதி, பிரத்தியேகவாதி, இனவெறி மற்றும் சகிப்புத்தன்மையற்ற பார்வையை உடையது என்று முன்வைத்து மேலும் இன்று நமது குருமார்கள் மீது பெரும் செல்வாக்கைச் செலுத்துகிறார்கள்.
எப்படி அபுபக்கர் அல்-பாக்தாடியை நிராகரித்து, ஜாகிர் நாயக்கை ஏற்றுக்கொள்வது சாத்தியமில்லையோ அதே போலவே, கிளாசிக்கல் இறையியலாளர்களை, அவர்கள் உண்மையில் பாக்தாதியைப் போலவே பாலியல் அடிமைகளுடன் உடலுறவு கொள்ளவில்லை எனும் காரணத்திற்காக ஏற்றுக்கொள்வதும் அவர்களின் நவீன போர்க்குணமிக்க பிரிவுகளை நிராகரிப்பதும் சாத்தியமில்லை, ஒருபுறம் தைமியா, வஹாப், சிர்ஹிந்தி மற்றும் வாலியுல்லா ஆகியோரை வணங்குபவர்களின் பாசாங்குத்தனத்தையும், மறுபுறம் குதுப், மௌதூதி, அஜாம் மற்றும் மக்திசி மற்றும் அவர்களைப் பின்பற்றுபவர்களான ஒஸ்மா பின்லேடன் மற்றும் அபு-பக்ர்அல்-பாக்தாதி போன்றவர்களை எதிர்ப்பதாகக் கூறும் பாசாங்குத்தனத்தையும் நமது தீவிரமயமாக்கப்பட்ட இளைஞர்கள் நன்றாகக் காணலாம். இஸ்லாம் ஒரு அமைதியான மதம் என்று சொல்லிக்கொண்டே அதே சமயம் கூடவே இஸ்லாத்திற்குச் சமமாக ஜிஹாதியைப் பாவித்து அதன் அடிப்படை இறையியலில் நம்பிக்கையை வித்திடும் பெற்றோர்கள், சமூகத் தலைவர்கள், அரசியல்வாதிகள், மதரசா ஆசிரியர்கள், மசூதி இமாம்கள், புத்திஜீவிகள் போன்ற நேர்மையற்ற நயவஞ்சகர்களை விட, நமது படித்த, 21 ஆம் நூற்றாண்டில், இணைய தலைமுறை இளைஞர்களில் சிலர் நேர்மையான பயங்கரவாதிகளாக இருப்பதைத் தேர்ந்தெடுப்பதில் ஆச்சரியமில்லை.
கடவுளின் முக்கிய அறிவுறுத்தல்களில் ஒன்று மத விஷயங்களில் மிதமானது (அல்குர்ஆன்: 4: 171 மற்றும் 5:80).இது நபிகளால் மீண்டும் மீண்டும் அடிக்கடிச் சொல்லப்பட்டது “எச்சரிக்கைமதத்தில் தீவிரவாதம் கூடாது ஏனெனில்அது உங்களுக்கு முன் இருந்தவர்களை அழித்தது." [சாஹிஹ் அல்-ஜாமி ’(எண்கள் 1851 & 3248), எம்.என். அல்-அல்பானி, எண். 2680, மற்றும் அல்-சாஹிஹா எம்.என். அல்-அல்பானி, எண். 1283.]
ஆனால் இஸ்லாமிய வரலாற்றில் ஆரம்பத்தில் இருந்தே தீவிரவாதம் இஸ்லாத்தில் குறிப்பிட்டக் காலத்து நோயாகக் காணப்படுகிறது.அவர்கள் இப்போது தெய்வீகமாகக் கருதும் ஹதீஸ் சேகரிப்புக்கு முன்பும், அவர்கள் உலகத்தின் மீது சுமத்த வேண்டிய மதக் கடமையைக் கருதும் ஷரியாவின் நெறிமுறைப்படுத்தலுக்கு முன்புமே முஸ்லிம்கள் தங்களுக்குள் மிகவும் கடுமையாகச் சண்டையிட்டுக் கொண்டனர்.
குர்ஆனில் போர்க்குணமிக்க வசனங்களுக்கு ஒரு மாற்று மருந்தை முஸ்லிம்கள் இன்னும் கண்டுபிடிக்கவில்லை.குர்ஆனின் அனைத்து வசனங்களையும் நித்திய வழிகாட்டுதலாகக் கருதுவது, மெக்காவில் இஸ்லாத்தின் ஆரம்ப ஆண்டுகளில் பெரும்பான்மையாக வெளிப்படுத்தப்பட்ட அத்தியாவசிய, அடித்தள, அமைப்புடனானவசனங்களின் உலகளாவிய தன்மையைக் குறைவான மதிப்பிற்கு உட்படுத்துகிறது.குர்ஆனில் பல வசனங்களுடன் ஒத்துப் போகும் விதத்தில் எங்களுக்கு நல்ல ஆலோசனை, சமீபத்தில்(செப்டம்பர் 2015) போப் பிரான்சிஸிடமிருந்து, கிடைத்தது. புனித குர்ஆனை "சமாதான தீர்க்கதரிசன புத்தகம்" என்று விவரிக்கும் போப் பிரான்சிஸ் முஸ்லிம்களை "போதுமான விளக்கத்தை" பெறுமாறு கேட்டுக் கொண்டார். குர்ஆனும் முஸ்லிம்களை மீண்டும் மீண்டும், அத்தியாயம் 39: 55 வது வசனம்; 39: 18; 39: 55; 38: 29; 2: 121; 47: 24, முதலியவற்றில் உள்ளது போன்று வசனங்களைப் பிரதிபலிக்கவும்,அவற்றின் சிறந்த அர்த்தத்தைக் கண்டறியவும் அறிவுறுத்துகிறது.
ஹதீஸ் மற்றும் ஷரியா தெய்வீக உள்ளூக்கம் பெற்றது என்றும் இஸ்லாமிய நம்பிக்கையின் அடிப்படைக் கூறுகள் என்றும் அழைப்பது பகுத்தறிவற்றது.  பூமியில் கடவுளின் இறையாண்மையை நிலைநாட்ட உதவுவதும், உலகில் “தெய்வீக” ஷரியா சட்டங்களை திணிப்பதும் ஒரு முஸ்லிமின் முதன்மை மதக் கடமை என்று கூறுவது இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கைகளுக்கு எதிரான தீவிரவாதத்தை தீவிரப்படுத்துவதற்கான ஒரு வழியாகும்.ஒரு அரபு உலகில் தாருல் இஸ்லாம் என்று அழைக்கப்படுபவர்களால் அவர்களுக்கு அடைக்கலம் மறுக்கப்பட மில்லியன் கணக்கான அரபு முஸ்லிம்கள் ஐரோப்பாவிற்கு கிட்டத்தட்ட வெறுங்காலுடன் அணிவகுத்து தாருல் ஹர்ப் என்று அழைக்கப்படுவதற்கு அடைக்கலம் தேடி வரும் நேரத்தில்,குஃபருக்கு எதிரான ஜிஹாத் மற்றும் இஸ்லாமிய அரசு என்று அழைக்கப்படும் நிலத்திற்கு ஹிஜ்ரத் (குடியேற்றம்) என்பது மதக் கடமை எனும் யோசனை பகுத்தறிவிற்கு ஒவ்வாதது.
வன்முறை மற்றும் மேலாதிக்கத்திற்கு வழிவகுக்கும் வகையிலான பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட தற்போதைய இறையியலை முஸ்லிம்கள் கைவிட வேண்டும். நாம், நமது எல்லா இலக்கியங்களையும், பிரபலமான புனைகதை மற்றும் காதல் இலக்கியங்களையும் கூட மறுபரிசீலனை செய்து, முஸ்லிம்களும் காஃபிர்களும் எதிரானவர்கள் மற்றும் எப்போதும் காஃபிர்களுக்கு எதிராகப் போரிட வேண்டும் அல்லது தனித்துப் பிரித்துக் கொண்டு வாழ்வது போன்ற சிந்தனைகள் அற்ற, ஒரு பன்முக கலாச்சார, பல மத உலகில் தற்போது வாழ்கிறோம் என்று நம் இளைஞர்களுக்கு விளக்க வேண்டும். சகிப்பின்மை, இனவெறி, மேலாதிக்கம் மற்றும் பிரத்தியேகவாதம் ஆகியவற்றின் மோசமான வடிவங்களை அதன் பள்ளிகளில் கற்பிக்கும் சவுதி அரேபியா கூட அனைத்து மத சமூகங்களையும் கையாள வேண்டும்.
ஐஎஸ்ஐஎஸ் நாளை இராணுவ ரீதியாக தோற்கடிக்கப்படலாம், இல்லாமல் கூட போகலாம். ஆனால் இது முஸ்லிம் தீவிரமயமாக்கல் பிரச்சினையைத் தீர்க்காது.நமது இஸ்லாமியக் கல்விக் கூடங்களும், கல்வி நிறுவனங்களும்பாதிப்பு மற்றும் ஒதுக்கப்படுதல் கதைகளுடன் கலந்ததற்போதைய இறையியலை விளக்கி, தொடர்ந்து சுயபாகுபாடு மற்றும் தீவிரவாதத்திற்கான அடித்தளம் அமைத்து வந்தால் இஸ்லாம் தொடர்ந்து சிக்கலாகும், முஸ்லிம்கள் சமகால வாழ்க்கை முறைக்குள் பொருத்திக் கொள்ளத் தொடர்ந்து போராடுவார்கள்.
மிதமான, முற்போக்கான முஸ்லிம்கள், சமாதானம் மற்றும் பன்மைத்துவம், மனித உரிமைகள் மற்றும் பாலின நீதிஆகியவற்றின் மாற்று இறையியலை இஸ்லாத்தின் போதனைகளுடன் எல்லா வகையிலும் ஒத்துப்போகும்படியாகவும், சமகால மற்றும் எதிர்கால சமூகங்களுக்கு ஏற்ற வகையிலும்அவசரமாக உருவாக்கிப் பிரச்சாரம் செய்ய வேண்டும். அதே நேரத்தில் வன்முறை மற்றும் மேலாதிக்கம் கொண்ட தற்போதைய இறையியலைமறுக்க வேண்டும்.
துரதிர்ஷ்டவசமாக, நாம் மேலே பார்த்தபடி, பணி அவ்வளவு எளிதானது அல்ல.தீவிரமயமாக்கல் ஒரே இரவில் நடக்கவில்லை.ஜிஹாதி இறையியல் நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்கும் மேலாக உருவாகியுள்ளது.இஸ்லாத்தை சுயமாகப் படித்த முக்கிய இறையியலாளர்கள் இஸ்லாத்தின் அரசியல் பதிப்பை நம்மிடம் கொண்டு வந்து, மதத்தையும் அதன்அனைத்துஆன்மீகத்தையும் அகற்றிவிட்டனர்.
இந்த கருத்தியல் போரை ஸ்லாமுக்குள் போராடுவது முஸ்லிம்களின் முதன்மையான கடமையாக இருந்தாலும், இது இனி ஒரு முஸ்லிமின்அக்கறை மட்டுமல்ல. உலகமும் முஸ்லீம் அறிஞர்களை அவர்களின் இறையியலில் இருக்கும் மேலாதிக்கம் மற்றும் தீவிரவாதத்தை எதிர்கொண்டு மறுபரிசீலனை செய்யச் சொல்ல வேண்டும்.தற்போதைய, பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட இஸ்லாமிய இறையியலில் உள்ள தீவிரவாதத்தை தோற்கடிக்க முற்போக்கான முஸ்லிம்கள் உலகின் பிற பகுதியினருடன் சேர வேண்டும்.தற்போதைய காலத்திற்கு ஏற்ற அமைதி மற்றும் பன்மைத்துவத்தின் ஒரு இறையியலை உருவாக்க இஸ்லாத்திற்கு தேவையான அனைத்து வளங்களும் உள்ளன, வசனங்களின் சிறந்த பொருளைக் கண்டுபிடிக்க வேண்டித் தொடர்ந்து சொல்லப்படும் குர்ஆனிய அறிவுரைகளுக்கு இணங்கநம்முடைய புனித நூலை வித்தியாசமாகவும் சரியாகவும் படித்தால் மட்டுமே உருவாக்க முடியும்.

No comments:

Post a Comment